1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன் / சசிகலா
Last Updated : திங்கள், 16 மே 2016 (18:59 IST)

பரபரப்பு வாக்குப்பதிவு - 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் செய்திகள் உடனுக்குடன்...

ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) காலை 7 மணி முதல் பரபரப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 

 


தற்போது:

வாக்குச்சாவடியில் பொதுமக்கள் போராட்டம்

வேலூர் ஓல்டுடவுன் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக - திமுக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க காவல் துறை நடத்திய தடியடியில் பொதுமக்களுக்கும் அடி விழுந்தது.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு நிலையத்தில் இருந்து எடுத்து செல்ல அனுமதிக்காமல் போராட்டம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பொது மக்களிடம் காவல் துறை அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.


வாக்குப்பதிவு சதவிதம் இந்த முறை?

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,71,15,846 ஆக இருந்தபோது 78.01% வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

ஆனால் 2016ஆம் ஆண்டு சட்டச்பை தேர்தலில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை - 5,82,01,687ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவின் சதவிதமும் உயரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்குப்பதிவு நேர முடிவின் கடைசி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முழு வாக்குப்பதிவு சதவிததிதின் தகவல் கிடைக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். மேலும் 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 69.19% என்பது குறிப்பிடத்தக்கது.



வாக்குப்பதிவு சதவிதத்தின் முழு தகவல் கிடைக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.19% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக பென்னாகரம் தொகுதியில் 85% வாக்குப்பதிவு


சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்தது


தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரகள் சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தை நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை: ராஜேஷ் லக்கானி

தமிழகமெங்கும் மழை பெய்து வருவதால் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்படுமா என்று ராஜேஷ் லக்கானியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தேர்தல் நேரத்தை நீடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், 6 மணிக்கு முன் வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்படும் என்றும், கூறினார்.

தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்:

தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பு செய்த மக்கள் தற்போது வாபஸ் பெற்றனர்.

கவர்னகிரி கிராமத்து மக்கள், அவர்களின் கோரிக்கையை யாரும் நிறைவேற்றாததால் வாக்களிக்க மாட்டோம் என்று தேர்தலை புறக்கணித்தனர். 
 
இதைத்தொடர்ந்து கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். பேச்சு வார்த்தையில் கிராம மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் வாக்களிக்க தயார் என்றனர்.
 
இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையான கருப்பசாமி கோயிலுக்கு மண்டபம் கட்டித்தர ஓப்புக் கொண்டார் மாவட்ட ஆட்சியர். ஆகையால் கிராம மக்கள் தற்போது புறகணிப்பை கைவிட்டு வாக்களிக்க தொடங்கினர்.


தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவை பற்றி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் ராஜேஷ் லக்கானி தற்போது வாக்குப்பதிவு பற்றி கூறியிருப்பதாவது:-

சென்னையில் வாக்கு சதவிதம் சற்று குறைந்துள்ளது.

திண்டிவனத்தில் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது, என்றார்.

4 மணி நிலவரப்படி தமிழகத்தில் 64% வாக்குப்பதிவு
 
1. காஞ்சிபுரம் - 59.00%
2. நாமக்கல் - 33.97%
3. மதுரை - 61.52%
4. திருப்பூர் - 59.57%
5. நீலகிரி - 33.59%
6. விழுப்புரம் - 51%
7. நாகை - 60.00%
8. திண்டுக்கல் - 61.51%
9. கரூர் - 74.18.00 %
10. நெல்லை - 59.57%
11. ஈரோடு - 66.07%
12. திருவள்ளூர் - 60.3%
13. சேலம் - 63.16%
14. திருச்சி - 59.00%
15. சிவகங்கை - 58.06%
16. பெரம்பலூர் - 68.00%
17. வேலூர் - 69.00 %
18. தேனி - 58.37%
19. கோவை - 70.00 %
20. அரியலூர் - 76.50%
21. ராமநாதபுரம் - 62.05 %
22. கடலூர் - 68.74%
23. விருதுநகர் - 62.09%
24. தஞ்சாவூர் - 30.00%
25. திருவாரூர் - 62.73%
26. கிருஷ்ணகிரி - 61.7%
27. புதுக்கோட்டை - 72.60%
28. தருமபுரி       - 76%
29. திருவண்ணாமலை - 57.48%

4 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.09% வாக்குபதிவு

புதுச்சேரியில் ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை 10% வாக்குப்பதிவு அதிகமாகி கொண்டிருக்கிறது. இதனால் வாக்குப்பதிவின் நேர முடிவில் கிட்டதட்ட 100% சதவிதம் எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. 

மணக்கோலத்தில் வாக்களித்த மாப்பிள்ளை:
 
திருப்பூர் மாவட்டத்தில், கார்த்திகேயன் என்பர் தனது கல்யாணத்தை முடித்து விட்டு மனைவியுடன் மணக்கோலத்தில் சென்று வாக்களித்தார்.
 
கார்த்திகேயன் இன்று அதிகாலை 5 மணி அளவில் தனது கல்யாணத்தை முடித்து விட்டு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்று அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.70% வாக்குபதிவு

வடிவேலு வாக்குப்பதிவு:

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்றும் கூறினார். 

3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 66.55% வாக்குபதிவு

கருணாஸ் வாக்குப்பதிவு:

தமிழக சட்ட்சபை தேர்தலில் வாக்களித்த நடிகர் கருணாஸ் வேட்பாளராக இருந்து கொண்டு வாக்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் கரோலியா பள்ளியில் வாக்களித்த திருவாடனை தொகுதி வேட்பாளர் நடிகர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நானே வேட்பாளராக இருந்து கொண்டு, வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 234 தொகுதியிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அம்மா தலைமையிலான அதிமுக கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்

3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 53.55% வாக்குபதிவு

டி.ஆர். வாக்குப்பதிவு:

சென்னை தி.நகரில் லட்சிய திராவிட இயக்கத்தில் தலைவர், நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “திரையுலக பிரபலமாக இருந்தாலும் நான் வரிசையில் எல்லாம் நிற்க மாட்டேன் என்று சொல்லாமல் வரிசையில் தான் நிற்க விரும்புகிறேன்.

சின்னம் பார்த்து ஒட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஒட்டு போடும் நிலை வருகிறதோ அன்றைக்கு தான் இந்த நாடு உருப்படும். தேர்தலில் யார் நிற்கிறார் அவருடைய தகுதி என்ன என்று தெரிந்து கொள்ளாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். இவை எல்லாம் என்றைக்கு கலையப்படுகிறதோ, அன்று தான் இந்த நாடு முன்னேறும்” என்று கூறியுள்ளார்.

104 வயது முதியவர் வாக்குப்பதிவு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த ரத்தினசபாபதி [வயது 104] என்பவர், தனது மனைவி பச்சியம்மாளுடன் [வயது 94] வாக்குப்பதிவினை செலுத்தி உள்ளார்.

புதுமண தம்பதி வாக்களிப்பு:

திருப்பூர் முத்துபுத்தூர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவருக்கும் சுதா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

பின்னர், புதுமண தம்பதியினர் இருவரும் திருமணம் முடிந்த கையோடு முத்துபுத்தூர் வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த வந்தனர்.

வாக்காளர் மாரடைப்பால் மரணம்:

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் முருகன் என்ற மாற்றுத்திறனாளி வாக்காளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து வாக்குச்சாவடியிலேயே மரணமடைந்துள்ளார்.

=================================================================

சிவக்குமார் வாக்குப்பதிவு - மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை:

சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்குப்பதிவு செய்தார்கள். பின்னர் கூறிய சிவக்குமார், ‘தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது.

7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

வழுக்கி விழுந்து மூதாட்டி பலி:

அருப்புக்கோட்டை கோபாலபுரத்தில் வாக்கு செலுத்த வந்த இடத்தில் ராஜேஸ்வரி என்ற வயதான மூதாட்டி வழுக்கி விழுந்து பலியாகியுள்ளார்.


=================================================================

1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 42.1% வாக்குப்பதிவு

தமிழக சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி 42.1% சதவித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைய மாலை 5 மணி வரை நேரம் இருப்பதால் இன்னும் வாக்குப்பதிவின் சதவிதம் கூடும் வாய்ப்புள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

=================================================================

1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 50% வாக்குப்பதிவு 

புதுச்சேரியில் தற்போது மழை பெய்வது நின்றுவிட்டதால் 30 சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் 35% சதவிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு உயர்ந்து வருகிறது.

=================================================================

வாக்குப்பதிவு நிறுத்தம்:

மனப்பாறை அருகே மனிக்கியூரில் 205ஆவது வாக்குச்சாவடியில், மின்னனு பதிவு இயந்திரத்தில் அதிகளவில் வாக்குகள் செலுத்தப்பட்டதாக காண்பிக்கப்பட்டதை அடுத்து திமுக, அதிமுக இரு கட்சியினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவில் மரணம்:

அரியலூரில் கொட்டும் மழையிலும் வாக்குப்பதிவு அளித்துவிட்டு வந்த வந்த பெண், மின்னல் தாக்கிப் பலியானார்.


=================================================================

சீமான் வாக்குப்பதிவு:
 
சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார். 
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ’சட்டசபை தேர்தலில் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.

=================================================================

தேர்தல் புறக்கணிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தனி அருகே மிட்டகண்டிகை கிராமத்தில், கடந்த 20 வருடங்களாக சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து தேர்தலை அக்கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.

மொத்தமுள்ள 586 வாக்குகளில், காலையிலிருந்து ஒரு ஓட்டுகள் கூட பதிவு செய்யப்படவில்லை.

=================================================================

நெல்லை கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வாக்களித்தார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கினை செலுத்தினார்.

=================================================================

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் புனித பிரான்சிஸ் சோவியர் நடுநிலைப்பள்ளியில் நடிகை த்ரிஷா வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, “ஓட்டளிப்பதற்காகவே நான் சென்னை வந்துள்ளேன். இது என்னுடைய கடமை. என்வே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

=================================================================

வழக்கத்தை விட சென்னையில் அதிக வாக்குப்பதிவு:

சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

=================================================================

வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு:

கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதி பாமக வேட்பாளர் முத்துகிருஷ்ணன் கார் கண்ணாடி உடைப்பு

=================================================================

11.00 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதத்தில்:

தமிழகம் முழுவதும் - 25.02  %

 
1. சென்னை - 25.00%
2. காஞ்சிபுரம் - 21.00 %
3. நாமக்கல் - 33.97%
4. மதுரை - 28.05%
5. திருப்பூர் - 36.65%
6. நீலகிரி - 33.59%
7. விழுப்புரம் - 34.00%
8. நாகை - 23.00%
9. திருவாரூர் - 16.00 %
10. கரூர் - 15.00 %
11. நெல்லை - 28.05%
12. ஈரோடு - 34.50%
13. திருவள்ளூர் - 30.00%
14. சேலம் - 12.00%
15. திருச்சி - 27.00%
16. சிவகங்கை - 20.50%
17. பெரம்பலூர் - 33.41%
18. வேலூர் - 10.00 %
19. தேனி - 31.57%
20. கோவை - 06.00 %
21. அரியலூர் - 30.50%
22. ராமநாதபுரம் - 03.00 %
23. கடலூர் - 27.00%
24. விருதுநகர் - 12.00 %
25. தஞ்சாவூர் - 30.00%
26. திருவாரூர் - 16.00%
27. கிருஷ்ணகிரி - 32.00%
28. புதுக்கோட்டை - 19.00%
29. கோயம்புத்தூர் - 16.00%
30. திருவண்ணாமலை - 30.00%

=================================================================

நடிகர் பார்த்திபன்:
 

வேட்பாளர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு ஓட்டுப் போட வேண்டும். வேட்பாளர் பற்றிய திருப்தி இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள். இளைஞர்களில் ஏராளமானோர் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளைப் போட தயாராக உள்ளனர்.

நோட்டாவை பற்றி நான் தொடர்ந்து பேசுவதால் ஏதோ நான் அதற்கு தான் வாக்களிக்கப் போகிறேனோ என்ற பிம்பம் வேண்டியதில்லை. அது நான் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதியின் வேட்பாளரை பொறுத்ததாகும். அது அந்த மின்னணு இயந்திரத்தின் இதயத்தோடு நான் பதியப் போகும் ரகசியம்.

=================================================================


அன்புமணி ராமதாஸ்:

இலவசம், மது ஆகியவற்றால் திராவிட கட்சிகள் தமிழகத்தை சின்னா பின்னமாக்கி விட்டனர், மேலும் மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

=================================================================

சென்னை ராயபுரம் பகுதியில் மின்வெட்டு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தம்.

கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் அதிமுக, திமுக இடையேயான மோதலால் வாக்குப்பதிவு நிறுத்தம்.

=================================================================

தலைவர்கள் வாக்குப்பதிவு:

கருணாநிதி - கோபாலபுரம்
ஜெயலலிதா - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
விஜயகாந்த் - சாலிகிராமம்
மு.க.ஸ்டாலின் - தேனாம்பேட்டை
அன்புமணி ராமதாஸ் - திண்டிவனம்
தமிழிசை சவுந்தரராஜன் - விருகம்பாக்கம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 
ஈரோடு கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி

நடிகர், நடிகைகள் வாக்குப்பதிவு:

அஜித்குமார் - திருவான்மியூர்
ரஜினிகாந்த் - ஸ்டெல்லா மேரிஸ்
கமல்ஹாசன் - ஆழ்வார்பேட்டை
கவுதமி - ஆழ்வார்பேட்டை
விஜய் - நீலாங்கரை

தலைவர்கள் பேட்டி:

கருணாநிதி:

தங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், ஆட்சி அமைக்க தேவையான அளவிற்கு வெற்றி பெறுவோம்

=================================================================

ஜெயலலிதா:

இன்னும் 2 நாட்கள் பொறுத்தால் 
மக்களின் தீர்ப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

=================================================================
 
ஸ்டாலின்:
 
திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறப்போகிறது. கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலை அடிக்கிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை அடிக்கிறது.

என்னை பொறுத்தவரையில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பதுதான் எனது எண்ணம். என்ன ஃப்ராடு தனம் பண்ணினாலும், என்ன அயோக்கியத்தனம் பண்ணினாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த தேர்தலை பொறுத்தவரையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

=================================================================

குஷ்பூ:

இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பணத்தை கைப்பற்றியுள்ளது. தோல்வி பயம் வந்ததால், எப்படியாவது பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் மக்கள் யார் தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று தீர்மானித்து ஜனநாயக முறையில் வாக்களிக்கும் நாள் இது. இதுவரை தமிழகத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை பார்த்து கிடையாது. நிச்சயமாக அதிமுக அரசுக்கு மிகப்பெரிய பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்

=================================================================

ரஜினிகாந்த்:

 
அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது அனைவரது ஜனநாயக கடமை என தெரிவித்தார்.
 
இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, ’அதை என்னால் சொல்ல முடியாது’ என பதிலளித்தார்.

=================================================================

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி தகுதி நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் பணம் கொடுத்து அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தால் அந்த வெற்றி செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

=================================================================

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.
 
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.