1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2016 (17:23 IST)

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு!

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 
 
அமெரிக்க நாட்டை சேர்ந்த அலிவர் ஹார்ட் என்பவருக்கும், பின்லாந்தை சேர்ந்த பெங்க் ஹோம்ஸ்ட்ரோம் என்பவருக்கும் இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அலிவர் ஹார்ட், ஹார்வர்டு பல்கலையிலும், பெங்க் எம்.ஐ.டி., கல்வி நிலையத்திலும் பேராசிரியராக பணிபுரிகின்றனர். 
 
பொருளாதாரத்துறையில் ஒப்பந்தங்கள் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பிரச்னை இல்லாமல் ஒப்பந்தங்கள் அமைப்பது குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.