செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (07:38 IST)

2000 ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் வாங்க வேண்டாம்: கண்டக்டர்களுக்கு உத்தரவு

2000 ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் தமிழக அரசு பேருந்துகளில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் கொடுத்தால் வாங்க வேண்டாம் என  போக்குவரத்துக்கழகம் நடத்துனர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது,.
 
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 4  நாட்களில் முடிகிறது என்பதால் இனிமேல் வங்கிகளில் 2000 நோட்டுக்களை  மாற்ற முடியாது என்பதால் நடத்துனர்களுக்கு  போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரூ.2000 நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
Edited by Siva