வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (10:19 IST)

ஊரடங்கில் தளர்வு: அவசர பணிகளுக்காக மாநகர பேருந்துகள் இயக்கம்!!

சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக விடப்பட்டன. 
 
இதன் பின்னர் முழு ஊரடங்கு காலத்தில் பேருந்து சேவை இருக்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கபடும் என புதிய அறிவிப்பு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிப்போர் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.