ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (11:19 IST)

ஏஐ வருகையால் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை இழப்பு! - நிதி ஆயோக் கணிப்பு!

IT Layoff

தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இதனால் ஏற்படப்போகும் வேலை இழப்புகள் குறித்து நிதி ஆயோக் கணித்துள்ளது.

 

ஆரம்பத்தில் நிரல் எழுத்தில் மட்டும் பெரும் தாக்கத்தை செலுத்திய ஏஐ தொழில்நுட்பம், தற்போது படங்கள், வீடியோக்கள் உருவாக்குவது, அனிமேஷன், ஏஐ ட்ரேடிங் என பல துறைகளிலும் பெரும் தாக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் மனிதர்களால் செய்யப்பட்டு வந்த பல வேலைகள் முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது.

 

நிதி ஆயோக்கின் கணிப்பின்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பத்தால் 20 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏஐ தொழில்நுட்பத்தை கற்றறிந்து பல துறைகளிலும் சுமார் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நிதி ஆயோக் கணித்துள்ளது.

 

Edit by Prasanth.K