1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 மே 2021 (14:32 IST)

சென்னை வந்து சேர்ந்த 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்!

தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. 

 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது. மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், மே 20 முதல் 18 வயதிற்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து தனி விமானத்தில் பிரத்யேக மருந்து பெட்டகத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தன.