ஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண் கடத்தல்: 2 வாலிபர் கைது


Ashok| Last Updated: வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (12:30 IST)
சென்னயில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.  உடந்தையாக இருந்த நண்பரும் கைது செய்யப்பட்டார்.

 
 


 
 
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இளம்பெண்(17) ஒருவர், அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த சில சினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்நிலையில், இவர் கடந்த 16ஆம் தேதி கடத்தப்பட்டதாக எம்.கே.பி.நகர் கவல் நிலையத்தில் அந்தபெண்ணின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
போலீசார் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த சிம்சன்(24) திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு சிம்சனின் நண்பன் மணிகண்டன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர், அந்த பெண்ணை மீட்டு சென்னை கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.  இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர், 2 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டப்பரிவு 365 (இளம்பெண் கடத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :