மொபைல்போன் சார்ஜ் போடும்போது விபரீதம்: 17 வயது சிறுவர் பலி!

shock
மொபைல்போன் சார்ஜ் போடும்போது விபரீதம்
siva| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (20:01 IST)
மொபைல் சார்ஜ் செய்யும் போது திடீரென மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவர் ஒருவர் பலியாகி உள்ளது சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த கொடுங்கையூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் சஞ்சய் தனது உறவினர் வீட்டில் தங்கி பல வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு செல்போனுக்கு சார்ஜ் போடும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் மயக்கம் அடைந்த சிறுவன் சஞ்சயை உடனடியாக அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து சஞ்சயின் சடலத்தை அவரது பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தரம் குறைவான மொபைல் சார்ஜரை வாங்கி பயன்படுத்தினால் இது போன்று ஷாக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மொபைல் போனுக்கு தரமான சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :