1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (18:37 IST)

பொங்கல் பண்டிகை - 16,768 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என ராஜகண்ணப்பன் பேட்டி. 

 
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பின்வருமாறு பேசினார். வருகிற ஜனவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மொத்தம் 6,468 பேருந்துகளும் என மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும். 
 
பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்கு ஏதுவாக தமிழகத்தில் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே. நகர் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.