1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 144 prohibition imposed on Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை செப்.25 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனரான வெங்கடேஷ் பண்ணையாரின் 13-வது நினைவு தினத்தையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் செப்.26 ஆம் தேதி குருபூஜை நடைபெறுகிறது.
 
கடந்த ஆண்டு பல்வேறு நினைவு தினங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு அமைதியை உறுதி செய்யும் வகையில் செப்.25 ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தடை உத்தரவு காரணமாக ஊர்வலங்கள் நடத்தவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சசிகலாவை பற்றி சசிகலா புஷ்பா சொன்னது நடக்கிறதா?