1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (09:40 IST)

12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்கியது!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது. 

 
12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத்தேர்வுக்கு வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொதுத்தெர்வு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வுகளும் இதே தேதிகளில் நடக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.