திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:39 IST)

''விதிமீறலில் ஈடுபட்ட 1223 ஆம்னி பேருந்துகள்... 8 பேருந்துகள் பறிமுதல்'' - போக்குவரத்துறை தகவல்

தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் சொந்த  ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்  ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் ஊர்களுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 6699 ஆம்னி பேருந்துகள் இல் போக்குவரத்துறை சோதனை மேற்கொண்டனர்.

இதில், கடந்த 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடத்தப்பட்ட சோதனையில், 1223 ஆம்னி பேருந்துகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.