வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (08:58 IST)

12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு திடீர் முடிவு !

தமிழகத்தில் பணியாற்றி வரும் 12 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அதற்கான அரசாணையைத் தமிழக அரசு நேற்று (பிப்ரவரி 16) வெளியிட்டது.

தமிழகத்தின் முக்கியத்துறைகளில் பணியாற்றி வந்த 12 ஐஏஎஸ் அதிகாரிகளை வேறுதுறைகளுக்கு மாற்றும் அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது.அதில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளராகப் பணியாற்றிவந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக பீலா ராஜேஷ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த பாலச்சந்திரன், பதிவுத் துறை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவைக்கு, ஆட்சியராகவும மாற்றப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு எஸ்.சிவராசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை சிறப்புச் செயலாளராகவும், தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராகவும், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரம், குடும்பநலத் துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.