1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 1149 new positive cases today at TamilNadu

முதல்முறையாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: பரபரப்பு தகவல்

கொரோனா
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22333ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல்முதலாக சென்னையில் 600ஐ தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 13பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 757 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 12049 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 491,962 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
பெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவசருக்கு கொரோனா பாதிப்பு