Daily Horoscope
✕

அரியலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 11 பேர் பலி

Written By bala
Updated: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:59 IST)
அரியலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.


 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேருக்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோ ஒன்றில் துக்க விழாவிற்கு சென்றுவிட்டு இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.


உடையார்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த சிமென்ட் பவுடர் ஏற்றிய லாரி ஒன்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 10 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

எல்லாம் காட்டு

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments