1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (16:06 IST)

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டு குழந்தைகளின் தாய்!

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டு குழந்தைகளின் தாய்!

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவனுக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
15 வயதான சிறுவன் ஒருவன் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு தோல் தொடர்பான பிரச்சனை ஒன்று இருந்ததால் அவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் கிரிஜா என்ற பெண் சிறுவனுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார்.
 
இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிரிஜா சிறுவனுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி அவனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சிறுவனின் தாய் அவனது டைரியை எடுத்து படித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
அதில் சிறுவனுக்கு வாடகை வீட்டில் இருக்கும் கிரிஜா என்ற இரண்டு குழந்தைக்கு தாயான பெண் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதை அவரது தாய் படித்து தெரிந்துகொண்டுள்ளார்.
 
உடனடியாக கிரிஜாவை வாடகை வீட்டில் இருந்து துரத்திய சிறுவனின் தாய் அவர் மீது காவல்துறையிலும் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் கிரிஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கிரிஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.