1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஜனவரி 2016 (13:04 IST)

104 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர் தகவல்

தமிழக மீனவர்கள் 104 பேரை பொங்கலுக்கு முன்பு விடுதலை செய்ய வாய்ப்பிருப்பதாக இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.


 
 
தமிழக மீனவர்கள் 104 பேரையும் சிறையில் அடைத்து வைத்திருக்க இலங்கைக்கு விருப்பம் இல்லை. தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன்பு அவர்களை திருப்பி அனுப்ப விரும்புகிறோம் என இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.
 
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலித இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 104 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட அவர்களின் 66 படகுகளையும் உடனே விடுவிக்க உயர்மட்ட அளவில் தலையிட்டு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 
இதனையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கையை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிறார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வரும் 10 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ளார். அப்போது அவர் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நேரில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக மீனவர்கள் விடுதலைக்கு உள்ள தடைகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.