செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (18:24 IST)

100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த விழுப்புரம் நீதிமன்றம்!

2008-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலியானார்கள், 37 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த வழக்கில் மின்விளக்கு ஒப்பந்ததாரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றம்.


 
 
விழுப்புரம் மேல்மலையனூர் ராஜா மற்றும் நான்கு பேர் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் தரமற்ற ஒயர்களை பயன்படுத்தியதால் தான் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிழப்பும், 37 பேர் படுகாயமும் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சரோஜினி தேவி, மின்விளக்கு ஒப்பந்ததாரர் ராஜாவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். 6 பேர் உயிரிழப்புக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், 37 பேர் படுகாயம் அடைந்ததுக்கு தலா 1 ஆண்டு சிறையும், திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்ததற்கு 3 ஆண்டு சிறையும், 30 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
 
இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 4 பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் மீதியுள்ள 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.