வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 25 மே 2016 (04:00 IST)

100 யூனிட் இலவச மின்சாரம் ஏமாற்றும் திட்டம்: ராமதாஸ்

100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டமாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். 

 
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணைப்படி 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 
 
ஏற்கனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும். அதே நேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

100 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும். அதனால் அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.