வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2016 (08:31 IST)

சிக்கியது 100 கிலோ கஞ்சா: திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் காந்திநகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் காவல்துறை.


 
 
காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலிசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 4 பேரல்களில் கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா மடிக்க மடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் மூட்டைகள் முதலியவை சிக்கியது.
 
அதனை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்ட வீடு யாருடையது என்பதை விசாரித்து வருகின்றனர் காவல்துறை. இதில் சிக்கிய கஞ்சாவின் மதிப்பு 100 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.