வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: ஜெயலலிதா பேட்டி

Ilavarasan| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (19:29 IST)
இந்த வெற்றி என்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும் என்று பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றி அளித்த கழக கண்மணிகளுக்கும், தமிழக மக்களுக்கும் அதிமுகவின் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி என்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். அதிமுக சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டு கழக வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மாலையில் உங்களை (நிருபர்களை) சந்திப்பதாக இருந்தேன்.

இருப்பினும் தேர்தல் முடிவுகள் தெளிவாகி விட்டதால் இப்போது உங்களை சந்திக்கிறேன். இந்த தேர்தல் முடிவு மூலம் தமிழக மக்கள் என் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com

Tamilnadu Lok Sabha 2014 Election Results
Overall Lok Sabha 2014 Election Results


இதில் மேலும் படிக்கவும் :