புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (15:16 IST)

சீர்காழி சேர்மன் நியமனம்… தலையிட்ட துர்கா ஸ்டாலின் – திமுகவினர் முற்றுகைப் போராட்டம் !

சீர்காழி ஒன்றிய சேர்மனை நியமிப்பதில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தலையிடுவதால் திமுகவினர் இடையே சலசலப்பு எழுந்துள்ளது.

சீர்காழி ஒன்றியத்தில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி சேர்மன் பதவியைப் பெற இன்னும் 2 சுயேட்சை வெற்றியாளர்களின் ஆதரவு தேவை. அதைப்பெற்று சேர்மன் பதவியை எளிதாக திமுக கைப்பற்றும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சீர்காழி ஒன்றியத்தில் திமுகவை வெற்றி பெற வைத்தால் சேர்மன் பதவி தருவதாக நாகை வடக்கு மாவட்டப் பொருளாளராக இருக்கும் ரவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக முத்து தேவேந்திரன் என்பவரை நியமிக்க துர்கா ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியுற்ற ரவியின் ஆதரவாளர்கள் திருவெண்காட்டில் இருக்கும் துர்கா ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நாகை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திரும்ப போகச் சொன்னார்.