ராமதாசுக்கும், அன்புமணிக்கு நான் நாயாக இருப்பேன் - பாமக அருள்

Last Updated: வெள்ளி, 28 மார்ச் 2014 (14:19 IST)
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் நான் எப்போதுமே நாயாகவே இருப்பேன் என்று திரும்பப்பெறப்பட்ட பாமக சேலம் வேட்பாளர் ரா.அருள் கூறினார்.
பாஜகவுடன் பாமக மற்றும் தேமுதிக கூட்டணி ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் உறுதி செய்வதற்கு முன்பே, சேலம் தொகுதியின் பாமக வேட்பாளராக இரா. அருள், கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டார்.
 
ஆனால், கூட்டணி அமைந்த பிறகு சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் சேலம் வேட்பாளராக எல்.கே. சுதீஷ்  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட இரா. அருள் அக்கட்சியின் நிர்வாகிகளை இன்று சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள், பணம் வாங்கிக் கொண்டு தான் பாமக சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அது உண்மையில்லை. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் நான் எப்போதுமே நாயாகவே இருப்பேன்.
 
தருமரிபுரியில் பாமக போட்டியிடவில்லை என்றால் என்ன, தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அதில், அவரை வெற்றி பெற செய்வதற்காக சேலம் பாமகவினர் முழு மூச்சாக பணியாற்ற வேண்டும். நானும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட சேலம் செல்கிறேன் என்று கூறினார்.
 
சேலத்தில் பாமக இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு ஆதரவாக பாமகவினர் செயல்பட வேண்டாம் என்பதை அருள் இங்கு மறைமுகமாகக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :