காமராஜர் படிக்கச் சொன்னார், ஜெயலலிதா குடிக்கச் சொல்கிறார் - ராமசுப்பு

Last Modified வெள்ளி, 28 மார்ச் 2014 (16:35 IST)
அப்போதைய முதல்வர் காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போதைய முதல்வர் குடிக்கச் சொல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் நெல்லை வேட்பாளர் ராமசுப்பு கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பளார் ராமசுப்பு பேசியதாவது"
 
காங்கிரஸ் ஆட்சியில் தான் பஞ்சாலை மற்றும் பீடி தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ.1,000 வழங்கப்பட்டதுடன் அதற்காக ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
 
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு 100 நாள் வேலை திட்டத்தை உருவாக்கி 150 நாட்களாக அதிகரித்ததுடன்,, அதற்கான கூலியை ரூ.167 ஆக உயர்த்தியளித்தது.
 
விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடனையும் எங்கள் அரசு தள்ளுபடி செய்தது. மதுவினால் ரூ.27ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்று தமிழக முதல்வர் பெருமையுடன் கூறுகிறார். மதுவால் எத்தனை குடும்பங்களில் தாய்மார்கள் கண்ணீர்  வடிக்கிறார்கள் தெரியுமா.
 
அப்போதைய முதல்வர் காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போதைய முதல்வர் குடிக்கச் சொல்கிறார். இது சரியா? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்கு கேட்கும் போது என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை நிறைவேற்றியுள்ளேன். இவ்வாறு ராமசுப்பு பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :