ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மாற்ற வேண்டும்: கே.வி.தங்கபாலு ஓப்பன் டாக்
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அந்த பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, வந்தவாசி கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், வசந்தகுமார், டாக்டர் செல்லகுமார் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆகியோரை சந்தித்து சிலகோரிக்கைகள் வைத்தனர்.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும், அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும். இது குறித்து அகில இந்திய தலைமையிடம் முறையிட்டுள்ளோம். தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்றார்.