1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 மார்ச் 2014 (17:14 IST)

பாஜக அணுகுமுறையில் ராமதாஸ் அதிருப்தி - பிரச்சாரம் செய்ய தயக்கம்

பாஜக தலைவர்கள் பாமகவை உதாசீனப்படுத்திவிட்டதாக ராமதாஸ் கருதுவதாகவும், அதனால் அதிருப்தியடைந்த அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தயக்கம் காட்டுவதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
BJP alliance
தேமுதிக இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதை ராமதாஸ் ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. அன்புமணி ராமதாஸ் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்.

கூட்டணி அறிவிக்கப்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் ராமதாஸ் இன்னும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. வரும் 5 ஆம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அவரது பயணத்திட்டம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி கூறியிருந்தார்.
 
பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முன்பே ராமதாஸ் பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்காக தேமுதிகவை உதாசீனப்படுத்திவிட்டதாகவும், பாஜக தலைவர்கள் புண்படுத்தி விட்டதாகவும் கருதுகிறார்.
 
அந்த அதிருப்தியிலிருந்து ராமதாஸ் இன்னும் மீளவில்லை. எனவே பிரச்சாரம் செய்ய அவர் தயங்குவதாக கூறப்படுகிறது. இதுவரை அவரது சுற்றுப்பயண திட்டம் தயாராகவில்ல. தேமுதிக வேட்பாளர்கள் ராமதாஸ் பிரச்சாரத்துக்கு ராமதாஸ் வருவது சந்தேகமே என்று பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.