இது என் ஆசை


கவிமகன்| Last Modified வெள்ளி, 13 மே 2016 (16:39 IST)
வானத்தை அளந்திட ஆசை
அதில் மண் வீடு கட்டி
வாழ்ந்திட ஆசை
 
விண்மீன்களை பிடித்திட ஆசை
அவள் கூந்தலில் சூடி
மகிழ்ந்திட ஆசை

 
 
முகில்களை நிறையிட ஆசை
பனி துருவத்தில்
அவற்றோடு வாழ்ந்திட ஆசை
 
சூரியனை கொழுத்திட ஆசை
அத்தீயினில் புது ஒளி
ஏற்றி சாதிக்க ஆசை
 
மதியினை சிறையிட ஆசை
அவ்வெண்மையில் நான் 
ஒளிர்ந்திட ஆசை
 
கடலினை குடித்திட ஆசை
துடிக்கும் மீன்களை
எண்ணி கணக்கிட ஆசை
 
உலகினை ஆண்டிட ஆசை
அதில் புதுவுலகத்தை புதிதாய்
படைத்திட ஆசை
 
புயலென மாறிட ஆசை
வஞ்ச பூக்களை மண்ணில்
சாய்த்திட ஆசை
 
சிலையென ஆகிட ஆசை
புவியினில் அமைதி வருவதை
அமைதியாய் பார்த்திட ஆசை
 
மழலையாய் மாறிட ஆசை
தந்தை மடியமர்ந்து ஓர் நிமிடம்
தூங்கிட ஆசை
 
கடவுளைக் கண்டிட ஆசை
மாண்ட என் துணை
மீளும் வரம் கேட்டிட ஆசை
 


இதில் மேலும் படிக்கவும் :