கோடையே...! கோடையே...!

Suresh| Last Updated: செவ்வாய், 1 மார்ச் 2016 (15:02 IST)
கோடையே!
நான் விரும்பும்
கோடையே!
நீ
சுட்டெரிக்கும் வெப்பம்
மட்டும்தான்
என்று
உலகம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.
 
நிஜம்
சொல்கிறேன்
கேள்!
 
கோடையே...
உன்னால்தான்
மழையை
மனம் விரும்புகிறது.
 
நினைத்துப் பார்
நீ மட்டும்
இல்லையென்றால்
மழையை
யார் விரும்புவார்?
 
தென்றலைத்
தேடவைப்பது யார்?
நீ தானே...
 
உன்னைக் கண்ட பின்புதானே
பனிக்கட்டியின்
நினைவு வருகின்றது.
 
இருட்டில் இருந்த
இலையுதிர் காலத்திற்கு
வெளிச்சத்தை கொடுத்த கோடையே!
 
எனக்கு மட்டும்
நீ
இதமாய்தான் இருக்கிறாய்.
கோடை என்றவுடன்
நினைவுக்கு வருவது
விடுமுறை மட்டுமல்ல
இன்பச் சுற்றுலாவும்தான்.
 
என்
வசந்த காலத்தை
நான்
நினைவுபடுத்துகையில்
அது என்
இறந்துபோன
கோடை
விடுமுறைதானே!...
 
 
- த.நா. பரிமளச்செல்வி
 
(என் ஏழு ஜென்மங்கள் என்ற கவிதை தொகுப்பிலிருந்து...)


இதில் மேலும் படிக்கவும் :