புதன், 31 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By Suresh
Last Updated : சனி, 14 நவம்பர் 2015 (22:15 IST)

உணர்வின் வலி

உணர்வின் வலி
ஓரக்கண்ணுல உன்னத்  தேடுறன்

உச்சி வெயிலுல திக்கி நிக்கிறன்

நீதான் என் சக்கர...

காதல் தீ மூட்டுற...

கண்ணில் நீராட்டுற...

கணவில் நீ வாட்டுற...

உச்சந் தலயில நித்தம் நீ நிக்குற...

பாக்காம பாத்துதான் பாசாங்கு பண்ணுற...

உயிரில் உறைந்துதான் உணர்வை நீ தீண்டுற...

நேரில் நீ முறைக்குற..

போனில் நீ சிரிக்குற...

என்மேல் உனக்கென்ன அக்கற...

உன் கண்ணில் நீ சொக்க வக்கிற...

பாவிப்பயலையும் பாட்டெழுதவக்கிற...
 
- ரா.அருள்