1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (06:13 IST)

காதல்.....காதல்....ஊடல்.....!

காதல்.....காதல்....ஊடல்.....!

காதல்..... இந்த வரிகளுக்குத்தான் எத்தனை வலிமை. மகிமை. ஆம், உலகில் விதையாக உதித்த உயிர் எல்லாம் விரும்பும் ஒரு மந்திரச் சொல். ஒரு ஆண் தனது உணர்வான காதல் மூலமே பெண்ணை நேசிக்கின்றான். ஆம், பெண்ணும் தனது இனிய காதல் மூலமே ஆணை வசியப்படுத்துகிறாள். ஆனால், காதல் வந்துவிட்டாலே, தானாக கோபமும் விந்துவிடும். பின்பு என்ன, காதல்.. ஊடல்... கலந்தால் மேலும் வலிமை பெரும் அந்தக் காதல். இதோ ஊடல் கொள்ளாத ஒரு காதல் நினைவலைகள்......!


 



காதல்.....காதல்....ஊடல்.....!
 
இப்போது எல்லாம் 
எனக்கு கோபமே 
வருவதில்லை.....!
என்னவள் கேட்டாள் 
ஏன் 
என்று.....!
நான் சொன்னேன்
நீ அருகில் இருப்பதால் 
என்று.......!
அதைக் கேட்டு 
அவள் 
மீண்டும் ஒரு முறை
வெட்கத்தால் மலர்ந்தாள்......!
ஆதலால் 
அவளை 
வாரி அணைத்துக் 
கொண்டேன்
அவள் மீது 
கொண்ட காதலால்...... !
 
காவியக் கவிஞன் கே.என்.வடிவேல்