1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:27 IST)

நேசிப்பாய் என எழுதுகிறேன்...

ஆசை ஆசையாய் எழுதுகிறேன்

ஆசையில் நானும் எழுதுகிறேன்

அன்பால் நானும் எழுதுகிறேன்

உன் அன்பிற்காக எழுதுகிறேன்

பார்த்துப் பார்த்து எழுதுகிறேன்

நீ

படித்துப் பார்க்க எழுதுகிறேன்

நினைத்து நினைத்து எழுதுகிறேன்

உன்

நினைவில் நிற்க எழுதுகிறேன்

நேசத்தோடு எழுதுகிறேன்

நீ

நேசிப்பாய் என எழுதுகிறேன்

உயிரை கொண்டு எழுதுகிறேன்

உன்னை

உயிராய் எண்ணி அனுப்புகிறேன்
 
                                    - சாரா தூரிகை