அந்தோனி ரோஸ்லினின் அழகிய கவிதைகள்

Murugan| Last Updated: புதன், 20 ஏப்ரல் 2016 (20:47 IST)
கவிதை : 1


தேடுகிறேன் உன்னை....
நல்லது நடக்கையிலும்
சோகம் சூழும் பொழுதும்
தேடுகிறேன் உன்னை.....
புதிய செயல் செய்கையிலும்
பிறரிடம் வாழ்த்து பெறும் போதும்
தேடுகிறேன் உன்னை....
பல உறவுகள் சூழ்ந்திருந்தாலும்
ஆத்மார்தமாக உணர்வது உனைத்தானே
தேடுகிறேன் உன்னை....
அருகில் இல்லையென்றாலும்
என் மனதில் இருப்பது நீயென்றாலும்
தேடுகிறேன் உன்னை
கவிதை : 2

இருப்பதை பகிர்ந்து ...
இன்புற்ற நாட்கள்...
அதிசயமாய் கிடைத்த பொருளை
அனைவரிடமும் பீற்றிக்கொண்ட நாட்கள்...
சின்ன சின்ன சண்டைகள்
சமாதானம் செய்ய ஒரு கூட்டம்...
ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம்
அத்தனையும் இன்பமான நாட்கள்
அனைவரின் வாழ்விலும்
வசந்த நாட்கள்...
மறக்க முடியா பொக்கிஷ நாட்கள்...
நினைக்க நினைக்க
போதை தரும் நாட்கள்
பாலிய பருவ நாட்கள்...

கவிதை : 3

சின்ன சின்ன சொல்லெடுத்து
சித்திரமே உன்னை பாட வந்தேன்
சிங்காரி நீயும் ...
சிரித்தபடி என் அருகினில் வந்திடடி
சிம்பிளாக பாடிடுவேன்
சிவந்தவளே என் அருமை
சின்னவளே ஆசையோடு அழைக்கின்றேன்
சிரத்தை கொஞ்சம் நீட்டினால்
சிவந்த விரலுக்கு
சின்ன மோதிரம் அணிவிப்பேன்
சிவப்பு கண்டங்கியில்
சிணுங்கலுடன் இணைந்த வெட்கத்தை
சிரித்தபடி ரசிக்கின்றேன்
சிப்பிக்குள் முத்தை போல்
சிங்காரி நீ எனக்கு


இதில் மேலும் படிக்கவும் :