புதன், 31 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By Murugan
Last Updated : சனி, 14 நவம்பர் 2015 (21:32 IST)

உதிரும் சிறகுகள்

உதிரும் சிறகுகள்
உதிரும் சிறகுகள்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்

காலையில்
 
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
 
- கவிக்கோ அப்துல் ரகுமான்