1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. நினைவலைகள்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (18:43 IST)

இலக்கியத்தின் நோக்கம் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

சோவியத் ஒன்றியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் இலக்கியத்தின் நோக்கம் குறித்து கூறியுள்ள கருத்து மிகவும் பிரபலமானது.
 

"ஒரு மனிதன் தன்னிலும் மக்களிலும் சமூகத்திலும் இருக்கக் கூடிய எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கவும், கவலைப் படவும், நேசிக்கவும் செய்வதற்காக, இலக்கியம் தனது சிலுவையை தியாகத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும். இதையே இலக்கியத்தின் நோக்கமாகக் கருதுகிறேன்".
 
- சிங்கிஸ் ஐத்மாத்தவ்

 
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (1928-2008) சோவியத் ஒன்றியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். "அன்னை வயல்", "முதல் ஆசிரியர்", "ஜமீலா", "குல்சாரி" உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர்.
 
கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவது படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் உலக மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.