செப்டம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23

Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:39 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு....

 
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களிடம் உங்களுக்கான ஆதரவு பெருகும். பங்குதாரர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்துறையினர் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
 
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.


இதில் மேலும் படிக்கவும் :