வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (16:39 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கொடுத்த வேலையை சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்யும் வித்தை அறிந்த ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை முருகனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வரவும்.  சோதனைகளை தகர்த்து சாதனைகளை புரிய முடியும்.