திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:53 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது தெம்பு பிறக்கும்.


 


வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வீடு,  வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் கூடுதல் அறைக்கட்டுவீர்கள். பணபலம் உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீ£ர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவ்வப்போது மனஉளைச்சல்,  வீண் டென்ஷன்,  அலைச்சல் வந்துப் போகும். சகோதரங்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். 
 
கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 8, 25, 11
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்