அக்டோபர் 2020 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:48 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
துடிப்புடன் செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் தேவையற்ற மன சஞ்சலம் அகலும். எந்த ஒரு காரியம் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும்.. வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். தொழில் தொடர்பான விவகாரங்களில் இருந்து வந்த வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  
 
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :