1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (18:28 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
 
கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். அவ்வப்போது டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து போகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான சூழ்நிலை சாதகமாக அமையும்.
 
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் வாகனத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். சொத்து விவகாரங்களில் அவசரம் வேண்டாம்.வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். காதல் விவாரகத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அன்பாகப் பேசுவதாக நினைத்து அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
 
கலைத்துறையினரே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 3, 12, 21  
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி