ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.
அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஓரளவு பணவரவு உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனம் பழுதாகி சரியாகும். உணர்ச்சிவசப்பட்டுப் பேச வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். முற்பகுதியில் உடல் உஷ்ணத்தால் அவ்வப்போது அடிவயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வந்துப் போகும்.
கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்துச் செல்லும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் விமர்சனங்களை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். நிதானித்து செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 5, 14, 15, 17, 23
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: இளம் சிவப்பு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி