வியாழன், 22 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (22:54 IST)

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

தாய்வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புது பங்குதாரர் இணைவார். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்