ஆகஸ்ட் 2021 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் கோபத்தை குறைத்து கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும்.
தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். மன அமைதி உண்டாகும்.