திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:45 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்மையையே கடைபிடிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம்  மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழிலில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினர் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. 
 
பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி வரவும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும்.