1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:40 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
தனது வசீகரமான தோற்றத்தாலும் வசியம் கொண்ட பேச்சாலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வித்தை தெரிந்த ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம்  வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்திலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள்  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 
 
பரிகாரம்:  ஆஞ்சநேயரை வணங்கவும்.  திட்டமிட்ட காரியங்கள் தொய்வின்றி நடக்கும்.