வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:30 IST)

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே நீங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இந்த மாதம்  நீண்ட நாட்களாக இருந்த காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்ககும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். 
 
பரிகாரம்: அம்மனுக்கு பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கவும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.