1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (15:50 IST)

அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி?

அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது. 


 
 
தேவையான பொருட்கள்: 
 
முழு கோழி - இரண்டு
அரிசி - அரை கிலோ 
எண்ணெய், பட்டர் - தேவையான அளவு
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை காய்ந்தது  - 1
வெங்காயம், தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
 
செய்முறை: 
 
1. முழு கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். அரிசியையும் இருபது நிமிடம் ஊறவைக்கவும். 
 
2. அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் எடுத்து கொள்ளவேண்டும். அரியுடன் சுத்தம் செய்த கோழியை வேக வைக்க வேண்டும்.
 
3. வேக வைத்து அரிசியையும் கோழியையும் தனியாக எடுத்துகொள்ளவௌம். வேக வைத்த தண்ணிரயும் வைத்துகொள்ளவும்.
 
4. கடாயில், எண்ணெய் பட்டரை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு,  காய்ந்த எலுமிச்சை போட்டு வாசனை வந்ததும் பின்னர் வெங்காயத்தை போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.  
 
5. பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு கோழி மற்றும் அரிசி வேக வைத்த தண்ணீரை ஊற்றவும்.
 
6. அதில் கொதிவந்ததும் அரிசி கலந்து உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
 
7. கொஞ்சம் கொதி வந்ததும் வேக வைத்துள்ள கோழியையும் அதில் சேர்த்து தம் போடவும். இவ்வாறு செய்தால் அரேபியன் கப்ஸா சோறு ரெடி.
 
குறிப்பு:
 
மசாலா அதிகம் விரும்புவர்கள் மசாலா சேர்த்துகொள்ளலாம். முழு கோழியை போடாமல் துண்டுகளாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.