Daily Horoscope
✕

நெத்திலி மீன் தொக்கு

Written By Sasikala
Updated: செவ்வாய், 19 ஜனவரி 2016 (12:40 IST)
கறிவேப்பிலை - ஒரு கீற்று
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய்பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி போடவும். சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.
 
பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும்.
 
தேவையான அளவு உப்பு சேர்த்து, திக்காக வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
 
குறிப்பு:
 
நெத்திலிமீனில் உள்ள முள்ளை எடுத்து விடுவது நல்லது. அல்லது அப்படியே போட்டும் செய்யலாம்.
 

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

Show comments