வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

இரவு நேரத்தில் நவராத்திரி கொண்டாடப்படுவது ஏன்...?

சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி. ஆஷாட நவரத்திரி ஆடி மாதத்தில் வரும் நவரத்திரியாகும். புரட்டாசி மதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும். தை மதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.
புரட்டசி மாத நவராத்திரி வழிபாடு: புரட்டாசி மாதத்தில் வரும் நவரத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை  சரத்காலம் என்று  கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள்.
 
இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா)  பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
 
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகி புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
 
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நவரத்திரியை வழிபடுவார்கள்.  தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடபடுகிறது.