பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை...!

பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான அழகான பருவம் என்றால் அது தாய்மை அடையும் பருவம் தான். இளம் பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது எதை  செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு கூட பெரியவர்கள் அருகில் இல்லாத நிலை தான். உணவுகளில் அதிகம் கவனம் எடுத்துக்  கொள்ள வேண்டும், ஏனெனில் எந்த உணவு உண்டாலும் அது குழந்தையை சென்றடையும்.
செய்யக்கூடியவை
 
கர்ப்பிணிகள் அதிகளவு கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், பாலில் கால்சியம் நிறைந்துள்ளது, குறிப்பாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலை  பருக வேண்டும். பருப்பு, பீன்ஸ், பயறு வகை உணவுகள், இரும்புசத்து மிக்க உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் தண்ணீர்  அதிகமாக பருக வேண்டியிருக்கும். 
 
கருவில் இருக்கும் குழந்தையுடன் தாய் பேச வேண்டும், அப்படி பேசுவதால் குழந்தை அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும்  பிடிக்கும்.
 
எதை செய்யக் கூடாது?
 
கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும். அதேவேளையில் கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம். 

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம், அதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலருக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்க கூடும். எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :