செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மைதாமாவு உணவுகளை தவிர்க்கவேண்டும் என கூறுவது ஏன் தெரியுமா....?

மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா  உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பதை பார்ப்போம்.
மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த  சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும். அமெரிக்காவில்  நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது.
 
மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த  அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும்.
 
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும்  வேதிப்பொருட்கள் உள்ளன. 
 
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில்  கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக அளவு மைதாவினை உணவில்  சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
 
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியைக் குறைத்து  விடும்.
 
மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல், சிறுநீரக கல் ,இருதய கோளாறு ,நீரிழிவு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது.